உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல் பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கான் இவரது மனைவி தீபா (வயது 34).
இவருக்கும் கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தீபா சம்பவத்தன்று தன் உடல் மீது மண் எண் ணை ஊற்றி கொண்டு அலறினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக தீபாவை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தீபா நள்ளிரவு இறந்தார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.