உள்ளூர் செய்திகள்
ஈரோடு காளைமாடு சிலை அருகே எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-03-05 15:30 IST   |   Update On 2022-03-05 15:30:00 IST
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காளைமாடு சிலை அருகில் எல்.ஐ.சி. ஊழியர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தெற்கு கிளை செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். 

கோவை கோட்ட இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் தில்லைகுமார் சிறப்புரை ஆற்றினார். மத்திய, மாநில அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வாழ்த்துரை வழங்கினார்.  வடக்கு கிளைச் செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எல்.ஐ.சி.யின் பங்கு விற்பன தேசவிரோதம்  இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை திரும்ப பெற வேண்டும். 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இன்சுரன்ஸ்  கார்ப்பரேஷன் முகவர்கள் வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Similar News