உள்ளூர் செய்திகள்
திமுக

பர்கூர் பேரூராட்சியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் முடிவு

Published On 2022-03-05 12:02 IST   |   Update On 2022-03-05 12:41:00 IST
தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட போட்டிவேட்பாளர் சந்தோஷ்குமார் வெற்றி பெற்று தலைவரான சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும்,சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து தி.மு.க. சார்பில் 10-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.பேரூர் செயலாளரின் மனைவியும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான செந்தாமரைபாலனை வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது.

நேற்று நடந்த தலைவர் தேர்தலில் செந்தாமரை பாலனை எதிர்த்து தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றசந்தோஷ்குமார் போட்டி வேட்பாளராக போட்டியிட்டார்.

வாக்குப்பதிவில் 15 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்று வாக்களித்தனர்.

வாக்கு பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரான செந்தாமரை பாலனுக்கு எதிராக போட்டியிட்ட, தி.மு.க.வை சேர்ந்த போட்டி வேட்பாளர் சந்தோஷ்குமார் 9 வாக்குகளும்,தி.மு.க. வேட்பாளர் செந்தாமரை 6 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து பேரூராட்சி தலைவராக சந்தோஷ்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

இந்த நிலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி லட்சுமி மனோகரன் வெற்றி பெற்றார்.

தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட போட்டிவேட்பாளர் சந்தோஷ்குமார் வெற்றி பெற்று தலைவரான சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள் பதவியில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஏற்று பர்கூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து வெற்றிபெற்ற சந்தோஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

Similar News