உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி(வயது26). இவர் தளவாய்புரம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் மாரீஸ்வரன் திருமணம் செய்து கொள் வதாக ஆசை வார்த்தை கூறி மதுரை, சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் தற்போது மாரீஸ்வரன் தான் வேறு சமுதாயம் என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார்.
மேலும் அவரது உறவினர்கள் என் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த புகாரின் அடிப் படையில் தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி மாரீஸ்வரன் அவரது பெற்றோர் பரமசிவம்-ஜெயமாதா, சகோதரர் மணிகண்டன் உறவினர் காஞ்சி உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.