உள்ளூர் செய்திகள்
சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி மாநகராட்சி அந்தஸ்துக்கு தரம் உயர்ந்த பிறகு முதன்முதலாக தற்போதுதான் தேர்தலை சந்தித்தது. இந்த மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 24 வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 11 வார்டுகளிலும், வெற்றி பெற்றது. மேலும் 4 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அதற்கு முன்னதாகவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9பேர் திமுகவில் இணைந்தனர். அவர்கள் மட்டுமின்றி சுயேட்சையாக வெற்றி பெற்ற 4பேரும் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தனர்.
இதனால் சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 45 ஆக உயர்ந்தது. இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 34-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க.வின் சங்கீதா நேற்று அறிவிக்கப்பட்டார்.
மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சங்கீதா போட்டியின்றி மேயராக தேர்வானார்.
இதையடுத்து சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் ஆக சங்கீதா பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சியின் ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சிவகாசி மாநக ராட்சியின் முதல் மேயர் ஆக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கீதாவுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.