உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே கார் மோதி மெக்கானிக் பலியானார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்த பேர் அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 41). இவர் கிருஷ்ணகிரியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று வேலை முடிந்து கிருஷ்ணகிரியில் இருந்து பேரஅள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.