உள்ளூர் செய்திகள்
.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்மயான கொள்ளை விழா

Published On 2022-03-04 15:55 IST   |   Update On 2022-03-04 15:55:00 IST
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில்,  அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு விடாய் உற்சவமும், ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. 

இதில் ஏராளமானபக்தர்கள் கூழ் எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல் பாடினார்கள். 

பின்னர் தீபம் ஏற்றி அம்மனைவழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று(மார்ச் 4) மாலை 6:30 மணிக்கு அக்னி குண்ட தீ மிதி விழா நடைபெற உள்ளது.

Similar News