உள்ளூர் செய்திகள்
மாதம் ஒருமுறை மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்
மக்களை தேடி மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாதம் ஒருமுறை மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று மேயர் நாகரத்தினம் கூறி உள்ளார்.
ஈரோடு
மக்களை தேடி மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாதம் ஒருமுறை மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று மேயர் நாகரத்தினம் கூறி உள்ளார்.
- மாநகராட்சியின் 3&வது மேயராக நாகரத்தினம் இன்று பதவியேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:&
எனக்கு மேயர் வாய்ப்பினை வழங்கிய தமிழக முதல் & அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால், - மாநகராட்சி மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் போன்ற மக்கள் பயனுள்ள திட்டங்கள் நிலுவையில் உள்ளது. முதல் வேலையாக இதனை சரி செய்து, மாநகர் முழுவதும் தார் ரோடுகள் விரைவில் அமைக்கப்படும்.
மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள சமுதாயக் கூடங்கள் சரிசெய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்படும்.
மேலும் புதிய சமுதாய கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களை தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு உங்கள் பகுதிக்கு மாதத்திற்கு ஒரு முறை நேரடியாக வந்து உங்களை (மக்களை) சந்தித்து நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அதைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
இன்னும் பல திட்டங்கள் - மாநகராட்சி மக்கள் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் அமைச்சரின் ஆலோசனையுடன், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
- மாநகராட்சி செம்மைப்படுத்த மக்களா கிய நீங்கள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் நடவடிக் கைகளுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.