உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்பு

Published On 2022-03-04 15:36 IST   |   Update On 2022-03-04 15:36:00 IST
அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு, 34 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்தில்  அரியலூர் நகராட்சியில் 4 மேஜைகளில் 9 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்டைகள் 4 இடங்களிலும்  வெற்றி பெற்றது. இதில் நகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுவந்த நிலையில். சுயேட்சையாக வெற்றி பெற்ற 4 கவுன்சிலர்கள் தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதால், அரியலூர் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சாந்தி பதவியேற்றுக் கொண்டார்
.
இதே போல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களையும், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வினர் தலா 4 இடங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இதில் 10&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி கட்சியான விசிக&வை சேர்ந்த சுமதி  ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.

இதே போல் உடையார் பாளையம் பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மலர்கொடியும், வரதராஜன் பேட்டையில் மார்கிரேட் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Similar News