உள்ளூர் செய்திகள்
சாலை மறியல் போராட்டம் நடை பெற்ற போது எடுத்த படம்.

திருமானூரில் சாலை மறியல் போராட்டம்

Published On 2022-03-04 15:22 IST   |   Update On 2022-03-04 15:22:00 IST
கோரிக்கைகளை வலியுறுத்தி திருமானூரில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரில்  அகிலஇந்திய விவசாயசங்கம்  மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  நெல் கொள்முதலில் விவசாயி களிடம் நேரடியாக  ஆன்லைனில் பதிவு முறையை விட்டு விட்டு பழைய முறைப்படி சிட்டா, 

அடங்கல், விவசாயிகளி டம் பெற்றுக்கொண்டு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருமானூர் பஸ் நிலையத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். தங்கமலை, வைத்தியலிங்கம், வரப்பிரசாதம், ராஜதுரை, கணேசன், ஜெகநாதன், தங்கராசு, பாப்பா ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

மகாராஜன், ஜெகநாதன், சிவகுரு, கரும்பாயிரம், ஆறு முகம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. 

இது குறித்து தகவல் அறிந் ததும் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை கைது செய்து அங்கிருந்த தனியார் மண்ட பத்தில் வைத்தனர். 

இதனால்  திருமானூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News