உள்ளூர் செய்திகள்
லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் ‘சஸ்பெண்டு’
சத்தியமங்கலத்தில் பேரம் பேசி லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் லாரியை நிறுத்தி ஜீப்பில் இருந்து கொண்டே லாரி டிரைவரை அழைத்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி கொண்டு லஞ்சம் கேட்டனர்.
அப்போது அந்த லாரி டிரைவர் தன்னிடம் ரூ.50 தான் உள்ளது. அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த டிரைவர் கூறினார். ஆனால் போலீசார் 50 ரூபாய் வாங்க மறுத்து 200 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள் இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
அதற்கு பதிலளித்த டிரைவர் தினமும் 50 ரூபாய் கொடுத்துவிட்டு தான் செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள். என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா என்றார். இதனை தொடர்ந்து போலீசார் 100 ரூபாய் கொடு என்று கூறினர்.
இதையடுத்து லாரி டிரைவர் பணத்தை கொடுத்து விட்டு சென்றார். லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி போலீஸ்காரர் செல்லகுமார், பங்களாபுதூர் போலீஸ்காரர் கந்தசாமி என தெரியவந்தது.
அவர்கள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்நிலையில் அந்த 2 போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்கொண்டார். அதன்படி அந்த 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.