உள்ளூர் செய்திகள்
சிவகாசி அருகே கல்லூரி மாணவி காதலனுடன் மாயமானார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கட்டளைப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் காளீஸ்வரி(வயது 20). இவர் தனியார் பெண்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
பொன்ராஜின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதால் மதுரை மாவட்டம் கொட்டாணிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.
அவரை பார்ப்பதற்காக காளீஸ்வரி அடிக்கடி மதுரை சென்று வந்தார்.அப்போது அந்த ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் பொன்ராஜ் கண்டித்தார். இந்தநிலையில் காளீஸ்வரி திடீரென மாயமாகி விட்டார்.
இதுகுறித்து மாரனேரி போலீசில் பொன்ராஜ் புகார் செய்தார். அதில், காளீஸ்வரி பாண்டியராஜனுடன் சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். காதலனுடன் கல்லூரி மாணவி சென்ற சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.