உள்ளூர் செய்திகள்
ராணுவ வீரர் அறிவழகன்.

வாகனம் மோதி ராணுவ வீரர் பலி

Published On 2022-03-03 16:16 IST   |   Update On 2022-03-03 16:16:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே மாரி செட்டிஅள்ளி ஜெக்கு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காவேரிப்பட்டணத்தில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் அறிவழகன் சென்று கொண்டிருந்தார். அப்போது தென்பெண்ணை ஆற்றுபாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அறிவழகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத் ததும் நாகரசம்பட்டி போலீ சார் விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப் பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தொடர்ந்து தேடி வரு கின்றனர்.

விபத்தில் பலியான ராணுவ வீரர் அறிவழகனுக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Similar News