உள்ளூர் செய்திகள்
தவக்காலத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
தவக்காலத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. அனைத்து தேவலாயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டர் பண்டி கையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிகழாண்டு ஈஸ்டர் தினம் ஏப்ரல் 17&ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக 40 நாள்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் புதன்கிழமை தொடங்கினர்.
இதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அருட் தந்தையர்கள், கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
திருமானூர் அருகே ஏலாக் குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை சுவைக்கின் தலைமையில், சிறப்பு திருப்பலி நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு அவர், சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.
வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில்பங்கு தந்தையர் பெலிக்ஸ் சாமுவேல் சிறப்பு திருப்பலி நடத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசி தவக்கலாத்தை தொடக்கி வைத்தார்.
அரியலூர் புனித லூர்து அன்னை ஆலயம், மைக்கேல்பட்டி புனித அன்னை ஆலயம், திருமானூர் புனித அருளானந்தர் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்கள மாதா ஆலயம், குலமாணிக்கம், கோக்குடி கிராமங்களிலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயம் மற்றும் ஆண்டிமடம், தென்னூர், செந்துறை, மீன்சுருட்டி உள்ளிட்ட தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடத்தி, தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
தவக் காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை உண்ணா திருத்தல், விரதம் இருத்தல் போன்ற வற்றை கடைபிடிப்பர். இதனால் நமது உடலும், மனமும் வலிமை பெற்று இறைவனின் அன்பை பெற முடியும் என்பது ஜதீகமாகும்.