உள்ளூர் செய்திகள்
சாலை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். அரியலூர் கோட்ட பொறியாளரின் தொழிற்சங்க விரோதபோக்கு, உயரதிகாரிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு சாலைப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றை கண்டித்தும்,
சாலைப் பணியாளர்களுக்கு காலணி, தளவாடப் பொருட்கள் வழங்க வேண்டும். 8 கி.மீக்கு 2 சாலைப் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதிய ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.