உள்ளூர் செய்திகள்
மவுனி சுகிதா

அந்தியூர் மருத்துவ மாணவி சொந்த ஊர் திரும்பினார்

Published On 2022-03-03 15:17 IST   |   Update On 2022-03-03 15:17:00 IST
உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் இருந்து, மாணவி மவுனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர்.
அந்தியூர்:

உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் இருந்து, மாணவி மவுனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர்.

உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் உள்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், இந்தியா உள் ளிட்ட பல்வேறு நாடுகளி லிருந்து படிக்கச் சென்ற மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில்   உக்ரைன் நாட்டில் லிவிவ் என்ற பகுதியில் மருத்துவம் படிக்கச் சென்ற ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜா- குணவதி தம்பதியரின்  மகள் மவுனி சுகிதா மற்றும் அவருடன் படிக்கும் மருத்துவ மாணவ மாணவியர்கள், தமிழகத்திற்கு அழைத்து வர தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மாணவ, மாணவிகளுடன் இணையவழியில் உரையாடி தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் இருந்து, மாணவி மவுனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர்.

நேற்று இரவுரவு கோவை வந்த மருத்துவ மாணவி மவுனி சுகிதா,  நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்தடைந்தார். அவரை பெற்றோர் கண்ணீர் மல்க ஆரவாரத் துட ன் வரவேற் றனர்.

இது குறித்து மாணவி மவுனி சுகிதா கூறுகையில்:-

நான் உக்ரைன் நாட்டில் உள்ள லிவிங் பகுதியில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வருகிறேன். என்னுடன் சேர்த்து மொத்தம் 24 பேர் தமிழகத்தில் இருந்து படிக்கச் சென்றோம்.

ரஷ்யாவுக்கும் உக்ரை னுக்கும் இடையே திடீர் போர் அறிவிக்கப் பட்டதால், அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டோம்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், முதல்- அமைச்சர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தார்.

மேலும் அயல்நாடு வாழ் தமிழர் மற்றும் மறுவாழ்வு ஆணையாளரிடம், அவ்வப் போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

அவரும் விரைவில் தமிழ்நாடு அழைத்துச் செல்வதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் தைரியம் கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News