உள்ளூர் செய்திகள்
போட்டியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

மகளிர் குழுவினருக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

Published On 2022-03-03 15:00 IST   |   Update On 2022-03-03 15:00:00 IST
மொடக்குறிச்சி வட்டார அளவிலான மகளிர் குழு உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நஞ்சை ஊத்துக்குளி சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி வட்டார அளவிலான மகளிர் குழு உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி  நஞ்சை ஊத்துக்குளி சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மொடக் குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் உமா குத்துவிளக்கேற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மொடக்குறிச்சி வட்டார மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் விக்டோரியா வரவேற்று பேசினார். 

இதில் ஆரோக் கியத்தை மேம்படுத்த இயற்கையாக கிடைக்கும் காய்கறிகள் மற்ற பொருள்களில் தயாரிக் கப்பட்ட உணவு மற்றும் ஆரோக்கிய பானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், குலவிளக்கு, விளக்கேத்தி, உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் மகளிர்குழுக்கள் கலந்து கொண்டதில் 46புதூர் ஊராட்சிக்கு முதலாவது பரிசும், குளு£ர் ஊராட்சிக்கு 2&வது பரிசும், கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு 3&வது பரிசும் வழங்கப்பட்டது. 

மேலும் இதில் வெற்றி பெற்ற குளூர், 46 புதூர் ஊராட்சி மகளிர்குழுவினர் வருகின்ற 4&ந் தேதி ஈரோடு மகளிர் திட்ட வளாகத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News