உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் வயது 45 விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் தனது வயல்வெளியில் நள்ளிரவில் தூங்கி எழுந்து சிறுநீர் கழிக்க வந்த போது அருகில் இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த மகாராஜனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பின்னர்அவர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.