உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய பஸ்.

லாரி பஸ் மீது மோதி 20 பேர் படுகாயம்

Published On 2022-03-02 15:24 IST   |   Update On 2022-03-02 15:24:00 IST
அரியலூர் அருகே லாரி மோதி 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர்:

அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோட்டியால் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது.  பேருந்தைஅணிக்குறிச்சியைச் சேர்ந்த கொளசியப்பன்வயது50 என்பவர்  ஓட்டினார்.

கா.கைகாட்டி அருகே சென்ற போது, எதிரே முனியங்குறிச்சியில் இருந்து சுண்ணாம்புக் கல் ஏற்றிக் கொண்டு அரியலூர் நோக்கி வந்த லாரி பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில்  பேருந்து ஓட்டுநர் கொளஞ்சியப்பன்,  பேருந்து நடத்துநர் குமார் 57,  பயணிகள் ராகவன் 18, அருண்குமார் 21, பார்த்தசாரதி 7, பாத்திமா மேரி 47, அஞ்சலாமேரி(50),  அஞ்சம்மாள்(55),  வன ரோஜா(32), சுவேதா 18 , தங்கமணி 45 , சுஜாதா 35 , புவனேஸ்வரி 41 , மீனாட்சி 50, கலைச் செல்வி 43 உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக  அரியலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News