உள்ளூர் செய்திகள்
மாரப்பம்பாளையம் பழப்பூசைய்யன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

சிவகிரி பழப்பூசைய்யன் கோவிலில் ஒரு எலுமிச்சைப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம்

Published On 2022-03-02 14:43 IST   |   Update On 2022-03-02 14:43:00 IST
சிவகிரி பழப்பூசைய்யன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.
சிவகிரி:

சிவகிரி பழப்பூசைய்யன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.


சிவகிரி அருகே மாரப்பன்பாளையம் பழப்பூசைய்யன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பழப்பூசைய்யன் சிறப்பு அலங்காரத்திதல் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் ஏலம் விடப்பட்டது. இதனை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதில் ஈரோட்டை சேர்ந்த தர்ம லிங்கம் பரமேஸ்வரி என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு எலுமிச்சைப்பழத்தை ஏலம் எடுத்தனர்.

பின்னர் அன்னதான த்துக்கு பயன்படுத்தப்பட்டு மீதம் இருந்த 1 கிலோ உப்பை மாரப்பம்பாளையத்தை சேர்ந்த முருகன் மல்லிகா என்ற பக்தர் ரூ.7500-க்கு  ஏலம் எடுத்து சென்றனர். மேலும் 1 கிலோ சர்க்கரையை பாரப்பா பாளையத்தை சேர்ந்த சரவணன் முத்துலட்சுமி என்ற பக்தர் ரூ.7500-க்கு ஏலம் எடுத்து சென்றனர்.

மேலும் பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளிக்காசு, அரிசி மூட்டை போன்ற பொருட் களையும் பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கூறி எடுத்து சென்றனர்.

Similar News