உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தெங்கு மரஹடா மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-03-01 16:01 IST   |   Update On 2022-03-01 16:01:00 IST
தெங்கு மரஹடாவில் கிராம மக்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
ஈரோடு:

தெங்கு மரஹடாவில் கிராம மக்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குனர் கிருபாசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டம், நீலகிரி வனக் கோட்டத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராமத்தில் வசிக்கும் மக்களை சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வெளியே இடம் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கள இயக்குனர் தலைமையில் ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, தெங்குமரஹடா பகுதியில் வசிக்கும் அனைத்து கிராம மக்களையும், வரும் 6-ந் தேதி சந்திப்பது.

அப்பகுதியில் தங்களது குடியிருப்பு தொடர்பாக சட்ட ரீதியிலான நிலையை எடுத்துரைத்து, அவர்களது கருத்துக்களை அறிந்து உறுதி செய்து அறிவுரை வழங்கப்பட உள்ளது.

இக்குழு கூட்டம் வரும் 6-ந் தேதி தெங்குமரஹடா கிராமத்தில் காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் தெங்குமரஹடா கிராம மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு  அவர் அதில் கூறியுள்ளார்.

Similar News