உள்ளூர் செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் செல்போனை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்பு

Published On 2022-03-01 15:43 IST   |   Update On 2022-03-01 15:43:00 IST
ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று ஒப்படைத்தார்
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று ஒப்படைத்தார்

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது.  மாவட்ட சூப்பிரண்டு சசிமோகன் நேரடி மேற்பார் வையில்   சைபர் கிரைம் செயல்பட்டு வருகிறது.

பேஸ்புக், வாட்ஸ்-அப், இண்டஸ்கிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள், வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் மோசடி ஆகியவை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேப்போல் இங்கு கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மாயமான செல்போன்கள் மற்றும் திருட்டு போன செல்போன் கள் குறித்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சம் மதிப்பில் 77 செல்போன்களை கண்டுபிடித்தனர்.

இந்த செல் போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் செல்போன்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Similar News