உள்ளூர் செய்திகள்
கத்தரிப்புலம்-நாகக்குடையான் இணைப்பு சாலை வேலி வைத்து அடைக்கப்பட்டுள்ளது

சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Published On 2022-03-01 15:31 IST   |   Update On 2022-03-01 15:31:00 IST
வேதாரண்யம் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம்-நாகக்குடையான் இணைப்பு சாலை ஏரஞ்சன் காட்டு பகுதியில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக 9 அடி சாலையாக உள்ள இந்த சாலை இரு கிராமங்களையும் இணைக்கும் சாலை ஆகும். 

இந்த சாலை வழியாக விவசாயம் செய்வதற்கு தேவையான உரம், பூச்சிமருந்து மற்றும் இடுபொருட்களை எடுத்து செல்லவும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லவும், பள்ளி குழந்தைகள் வேனில் சென்று வரவும் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்தது. தற்போது திடீரென்று அந்த பாதையை தனிநபர் வேலி வைத்து அடைத்து வைத்துவிட்டார். 

இதனால் பொது மக்கள், விவசாயிகள் அவதி படுகின்றனர். இச்சாலை தற்போது கத்தரிப்புலம் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இதுகுறித்து வேதாரண் யம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வி அடைந்தது விட்டது.
 
எனவே பொதுமக்கள் மாணவர்கள் விவசாயிகள் நலன்கருதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News