உள்ளூர் செய்திகள்
கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
வேதாரண்யம் அருகே கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தொடக்கி வைத்தார்.
இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் ரூ.16 லட்சம் செலவில் அமல்படுத்தப்பட்டு நூறு நாள் வேலைவாய்ப்பு மூலம் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கபட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கிராம பழமுதிர்சோலையை உருவாக்கவும் மா, புங்கை, வேம்பு, தென்னை உள்ளிட்ட பலவகையான மரங்களும் நடப்பட்டுள்ளன.
இதனை பாதுகாத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பதற்கு ஏதுவாக கோவில் வளாகத்தின் அருகிலேயே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கபட்டும் என்று ஊராட்சி மன்றத்தலைவர் ராமையன் தெரிவித்தார்.