உள்ளூர் செய்திகள்
புதிய வழிதடத்தில் பஸ் போக்குவரத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி-தாளவாடிக்கு புதிய வழிதடத்தில் பஸ் இயக்கம்

Published On 2022-03-01 15:05 IST   |   Update On 2022-03-01 15:05:00 IST
அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி&தாளவாடிக்கு புதிய வழிதடத்தில் புதிய பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஈரோடு:

அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி&தாளவாடிக்கு புதிய வழிதடத்தில் புதிய பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அந்தியூரில் இருந்து திருச்சி, வேளாங்கண்ணி உள்பட பல்வேறு  சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு செல்வதற்கு நேரடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும் என அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இது தொடர்பாக தமிழக முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இந்த கோரிக்கையை ஏற்று அந்தியூரில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் விட  நடவடிக்கை எடுக்கப் பட்டது.

இதனையடுத்து அந்தியூரில் இருந்து பவானி, ஈரோடு, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு பஸ் இயக்கப்பட்டது. 

மேலும், அந்தியூரில் இருந்து அத்தாணி, சத்தி வழியாக தாளவாடிக்கு பஸ் இயக்கப்பட்டது.


Similar News