உள்ளூர் செய்திகள்
லாரியில் தூங்கிய டிரைவர் திடீர் சாவு
வேதாரண்யத்தில் லாரியில் தூங்கிய டிரைவர் திடீரென்று மரணமடைந்தார்.
வேதாரண்யம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்கா மணத்தான் நல்லார் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). லாரி டிரைவர்.
இவர் உப்பு லோடு ஏற்றுவதற்காக நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வந்தார். இரவு நேரமாகி விட்டதால் லாரியை நாகை சாலையோரம் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார்.
காலையில் உப்பு ஏற்றுவதற்காக அவரை லாரி ஷெட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டும் முடியவில்லை. இதையடுத்து நேரில் சென்று பார்த்த போது லாரியில் செந்தில்குமார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமார் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியில் செந்தில்குமார் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.