உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு:

அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள்.ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.கே. எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தி.மு.க அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டம் காரணமாக வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.