உள்ளூர் செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 55), தொழிலாளி. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கிய அருணாசலத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் இயல்பான நிலைக்கு வரவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அருணாசலம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள பலபட்டியை சேர்ந்தவர் பாலுமகேந்திரன் (38). இவர் அதே பகுதியில் அச்சாபீஸ் நடத்தி வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான பாலுமகேந்திரனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.