உள்ளூர் செய்திகள்
காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி.

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

Published On 2022-02-27 15:04 IST   |   Update On 2022-02-27 15:04:00 IST
வேதாரண்யத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவியளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு 199-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றுசேர்ந்து காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் ரூ.7,27,500 குடும்பத்திற்கு வழங்கினர்.

வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு வைத்தியார்காடு பகுதியை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜா (வயது 51). இவர் கடந்த மாதம் 10ந் தேதி இறந்துவிட்டர் 

இவரது குடும்பத்திற்கு 93-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சிறப்பு உதவி காவலர்கள் சுமார் 4000 ஆயிரம் பேர் சேர்ந்து ரூ.7, 27,500 ரூபாயை அவரது மனைவி ஜெயலட்சுமியிடம் வழங்கினர்.

மேலும் நாகை மாவட்ட சிறப்பு உதவி காவலர்கள் சார்பாக ரூ.80 ஆயிரமும் வழங்கபட்டது. 

நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட காக்கும் கரங்கங்கள் காவலர்கள் கலந்து கொண்டனர் 

இதேபோல் மதுரை, பெரம்பலூர் விருதுநகர், கோயம்புத்தூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இறந்த சிறப்பு உதவிகாவலர்களின் குடும்பத்திற்கு காக்கும் கரங்கள் சர்பாக 36 லட்சத்து 41 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது என காக்கும் கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

Similar News