உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும்

Published On 2022-02-27 14:38 IST   |   Update On 2022-02-27 14:38:00 IST
ஈரோட்டில் மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு:

ஈரோட்டில் மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு முதல்&அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கையில், உரத்தின் விலையை குறைத்து அறிவிக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், உர விலை உயர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. 

கடந்த ஆகஸ்டு மாதம்  ஒரு மூட்டை பொட்டாஸ் உரம் 870 ரூபாயாக இருந்து தற்போது, 1,700 ரூபாயா கவும், கலப்பு உரங்கள் 30 முதல், 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 

யூரியா தட்டுப்பாடாக உள்ளது. இதனை போக்கு முயல வேண்டும். கடும் ஆள் பற்றாக்குறை உள்ளதை மற்ற 100 நாள் வேலை திட்டப்பணியாளர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த அறிவிக்க வேண்டும்.

மஞ்சள், மரவள்ளி பயிருக்கு உரிய விலை, விளைச்சல் இன்று விவசாயிகள் பாதிக்கின்றனர். மஞ்சளுக்கு ஈரோட்டிலும், மர வள்ளிக்கு நாமக்கல்லிலும் தனி வாரியம் அமைக்க வேண்டும். 

நெல்லுக்கான ஆதார விலையை, கிலோவுக்கு, 30 ரூபாயாக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 1,000 லிட்டர் மானிய விலை டீசல் வழங்க வேண்டும்.

பால் விலை லிட்டருக்கு, 50 ரூபாயாக உயர்த்த வேண்டும். கால்நடைகளை காக்க, ஒவ்வொரு தாலுகாவிலும் அதிவேக ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும். 60 வயதான விவசாயிகளுக்கு அரசு பஸ்சில் இலவசமாக செல்ல பாஸ் வழங்க வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு வழங்கும் மானியத்தை உயர்த்தி, ஒரு லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடைக்கு எந்திரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Similar News