உள்ளூர் செய்திகள்
வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல்
அருப்புக்கோட்டையில் வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் மதுக்கரா (39). இவர் அங்குள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வங்கி அருகிலுள்ள ஏ.டி.எம். மீது மர்ம நபர் கல்வீசி தாக்கினார். இதை வங்கி மேலாளர் மதுக்கரா தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மீது கல் வீசி கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.