உள்ளூர் செய்திகள்
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
சிவகாசியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கூரார்பட்டி அசைபா காலனியை சேர்ந்த காளிராஜ் (56) என்பவர் தடை செய்யப்பட்ட பேன்சிரக பட்டாசுகளை வைத்திருந்ததாக ஏழாயிரம்பண்ணை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 16 பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.