உள்ளூர் செய்திகள்
உக்ரைன் ரஷ்யா போர்: தமிழக-கேரள மாணவர்களை காப்பாற்ற வேண்டும் ஓசூர் மாணவி பேட்டி
உக்ரைன்-ரஷ்யா போர் தமிழக& கேரள மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஓசூர் மாணவி கூறினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஜான் எபினேசர் ராஜா (வயது50). இவர் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா விடியா, தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். இவர்களது மூத்த மகள் சாரா லிசா கேடியா (21). உக்ரைனில் கார்க்கிவ் என்ற இடத்தில் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் சூழல் ஏற்பட்டதை அடுத்து கடும் அச்சமடைந்த ஜான் எபினேசர்,வனிதா தம்பதியினர் தங்களது மகளை அங்கிருந்து தமிழகம் அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி போர் தொடங்கு வதற்கு ஒரு நாளைக்கு முன்பு உக்ரைனில் இருந்து அவர்களது மகள் சாரா விமானம் மூலம் தமிழகம் திரும்பி னார். சென்னையில் இருந்த அவர் நேற்று ஓசூர் வந்தார். அவரை பெற்றோர்கள் வாரி அணைத்து, பாசத்துடன் வரவேற்றனர்.
உக்ரைன்&ரஷ்யா இடையே தற்போதைக்கு போர் வராது என்று மாணவர்கள் எண்ணி கொண்டிருந்தனர். ஆனால், எனது பெற்றோர்கள் மிகவும் அச்சமடைந்து கண்டிப்பாக நாடு திரும்பி விட வேண்டும் என வற்புறுத்தியதால் கடும் போராட் டத்துக்கு இடையே விமான டிக்கெட் பெற்று போருக்கு ஒரு நாளைக்கு முன்பு தமிழகம் வந்தேன்.
என்னுடன் படிக்கும் மற்ற மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு பாதுகாப்பு இல் லாமல், தவித்து வருகின்றனர்.
தற்போது, அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. போர் சூழலில், பாதாள அறையில் உணவின்றி தவிக்கும் தமிழக மாண வர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களின் கைகளில் இருக்கும் செல் போன்களிலும் இணையதள வசதி இல்லாமல் போகக்கூடிய சூழலும் ஏற்படும். அப்போது அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே விரைவில் அவர்களை பாது காப்பாக நாடு திரும்ப முயற்சிகளை மத்திய&மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.