உள்ளூர் செய்திகள்
மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை கடித்து குதறிய நாய்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆட்டை தெருநாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி சுற்று வட்டாரமான சூளகிரி பேரிகை சாலை, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை, உத்தனப்பள்ளி பகுதியில், அத்தி முகம் பகுதியில், பேரிகை பகுதியில், காமன் தொட்டி பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
இதனால் பகலிலும் இரவிலும் சாலை செல்வோர்களை நாய்கள் விரட்டுவதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் அத்திமுகம் கிராமத்தில் முரளி என்பவர் வீட்டில் சில ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த ஆடுகள் நேற்று மதியம் பேரிகை சூளகிரி சாலை அத்திமுகம் பகுதி மசூதிமுன்பு ஒரமான பகுதியில் ஒரு ஆடு மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சுற்றிதிரிந்த நாய்கள் அந்த ஆட்டை துரத்தி சென்று பிடித்து கடித்து குதறியது. இதனை கண்ட டெம்போ ஆட்டோ ஒட்டுனர்கள் நாய்களை விரட்டினர். இதனால் நாய்கள் ஓட்டம் பிடித்த தால் ஆடு சிறிய காயத்துடன் உயிர் தப்பியது.