உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

Published On 2022-02-26 10:14 GMT   |   Update On 2022-02-26 10:14 GMT
கவுந்தப்பாடி அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

கவுந்தப்பாடி அருகே 1,200 கிலோ  ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, கவுந்தப்பாடியில் இருந்து வைரமங்கலம் செல்லும் சாலையில் வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 
இதையடுத்து போலீசார் விசாரணையில் பவானி, எலவமலை, கரை எல்லப் பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (31) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி வந்து பெருந்துறையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு குமரேசனை செய்துனர். மேலும் அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 நாட்களில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News