உள்ளூர் செய்திகள்
நாட்டு துப்பாக்கியுடன் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் கைதான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் கைதான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பவானிசாகர் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் அம்மாசை மற்றும் போலீசார் பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் உள்ள கன்ரா மொக்கை, ஜே.ஜே. நகர், சித்தன்குட்டை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
தொடர்ந்து கன்ரா மொக்கை அடுத்த ஒத்தபன மரக்காட்டில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி செல்ல முயன் றார். இதையடுத்து போலீ சார் அவரை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பவானிசாகர் அடுத்த ஒத்தப்பனைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி (38) என்பதும், அவரது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு அடியில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி மற்றும் 50 பால்ரஸ் குண்டுகள் மறைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பெரியசாமியை கைது செய்து தோட்டத்தில் மறைத்து வைத்து இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் பால்ரஸ் குண்டுகளை பறி முதல் செய்தனர்.
இதையடுத்து பெரிய சாமியை போலீசார் சத்தியமங்கலம் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோபி கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.