உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி காவலாளி கைது

Published On 2022-02-26 15:34 IST   |   Update On 2022-02-26 15:34:00 IST
கிருஷ்ணகிரியில் பெண்ணை தாக்கி வீட்டுச்சுவரை சேதப்படுத்திய மருத்துவ கல்லூரி காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே மேலசோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி நந்தினி (வயது 30). இவர் ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய்குமார் (35). இவர் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக ஜெய்குமார், நந்தினியிடம் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வீட்டு காம்பவுண்டு சுவரை இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜெய்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Similar News