உள்ளூர் செய்திகள்
கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது-

சென்னிமலை முருகன் கோவில் நிலங்கள் அளவீடு

Published On 2022-02-26 15:29 IST   |   Update On 2022-02-26 15:29:00 IST
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவின்படியும், ஆணையர் அறிவுரையின் பேரில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, நில அளவை எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

 அதன்படி சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி முடிவடைந்து ஈரோடு மண்டலத்தில் முதலா வதாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான அட்டவணை பிடாரியூர் கிராமம், சர்வே எண் 172-ல், 10.99 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலத்திற்கு சர்வே எல்லை கற்கள் நடும் பணியானது ஈரோடு மண்டல இணை ஆணையர் மங்கையற்கரசி தலைமையில் தொடங் கியது. 

இதில் ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி, முருகன் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், உதவி கோட்டப் பொறியாளர் காணீஸ்வரி, உதவிப்பொறியாளர் சரவணன், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் (கோவில் நிலங்கள்), அழகுராஜன், அரசு உரிமம் பெற்ற நில அளவையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News