உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் மனநலம் பாதித்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மகராஜகடை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ராமராஜ் (வயது 34). இவர் சற்று மனநிலை பாதித்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி, வீட்டில் வைத்து ராமராஜ் , தூக்குபோட்டார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கிருஷ்ணகிரி மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.