உள்ளூர் செய்திகள்
உக்ரைனுக்கு மருத்துவ பயிலும் வேளாங்கண்ணி மாணவி வீடியோ பதிவு

உக்ரைனில் உணவின்றி தவிக்கிறோம் - நாகை மாணவி வேதனை

Published On 2022-02-26 12:26 IST   |   Update On 2022-02-26 12:26:00 IST
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் 3-ம் ஆண்டு பயின்று வரும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறியுள்ள வின்சியா, குடியிருப்புகளின் சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார். தான் தங்கி இருக்கும் பகுதியில் சிக்கியுள்ள 8 ஆயிரம் இந்திய மாணவர்களையும், உக்ரைன் நாடு முழுவதுமுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News