உள்ளூர் செய்திகள்
தன்னை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த விவசாயி

போச்சம்பள்ளியில் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு விவசாயி வந்ததால் பரபரப்பு

Published On 2022-02-26 10:31 IST   |   Update On 2022-02-26 10:31:00 IST
கடித்த பாம்புடன் விவசாயி மருத்துவமனைக்கு வந்த சம்பவம் போச்சம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). விவசாயியான இவர் இவரது விவசாய மாந்தோப்பில் தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

அப்போது புதரில் இருந்த வி‌ஷ பாம்பு அவரை கடித்து விட்டது. இதனால வலியில் துடித்த அவர், தன்னை கடித்த பாம்பை விரட்டிச் சென்று பிடித்தார். பின்னர் அந்த பாம்பை பிளாஸ்டிக் பையில் கட்டி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

பாம்புடன் மனோகரன் வருவதை கண்ட மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் மனோகரனை பரிசோதித்த மருத்துவர் தீவிர சிகிச்சையளித்தார்.

கடித்த பாம்புடன் விவசாயி மருத்துவமனைக்கு வந்த சம்பவம் போச்சம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News