உள்ளூர் செய்திகள்
கைது

லாரி நிறுவனத்தில் வாகனம் திருடியவர் கைது

Published On 2022-02-25 16:50 IST   |   Update On 2022-02-25 16:50:00 IST
விருதுநகரில் லாரி நிறுவனத்தில் வாகனம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்

திருத்தங்கல் தனியார் லாரி நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான சரக்கு வேன் திருட்டு போனது. இது குறித்து நிறுவன மேலாளர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் செய்தார்.

 சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வாகனத்தை திருடியதாக சிவகாசியைச் சேர்ந்த வேல்முருகன்(வயது23) என்பவரை கைது செய்தனர்.

ஒட்டப்பிடாரம் தாலுகா சின்னான்குளத்தை சேர்ந்த லட்சுமியம்மாள்(80) பஸ்சில் சாத்தூர் வந்தார். வெங்கடாசலபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது பின்னால் இறங்கிய பெண், லட்சுமியம்மாளின் கைப்பையை பறித்துசென்றார். அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சாத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவரது பெயர் அன்னமாரி(88) என தெரியவந்தது. சிவகாசி ஆனையூரை சேர்ந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள அச்சங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வினோத் குமார்(30). இவர் சாக்கு பையில் 2 கிலோ வெடி பொருட்கள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் விளாம்பட்டியை சேர்ந்த கண்ணன்(32) 10 குரோஸ் கருந்திரியை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது 10 கிலோ வெடி பொருட்கள் மற்றும் 20 பண்டல் சரவெடி வைத்திருந்ததாக சீவலராஜ் பாண்டியன்(45) என்பவரை கைது செய்தனர்.

Similar News