உள்ளூர் செய்திகள்
சிறப்பு முகாம்

பட்டா சிறப்பு முகாம்

Published On 2022-02-25 16:37 IST   |   Update On 2022-02-25 16:37:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் பட்டா சிறப்பு முகாம் 3 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட  கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களுக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சி னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று சிவகாசி வட்டம் கிருஷ்ணபேரி கிராமத்தில் முகாம் நடைபெற்றது. மார்ச் 2ந்தேதி அனுப்பன்குளம், அருப்புக்கோட்டை, வேலாயுதபுரம், கே.புதூர்,  கூவர்குளம், பரையனகுத்தி, தேனூர், ஊத்தாகுளம், கோவிலாங்குளம், குண்டுகுளம், சிந்தப்பள்ளி, அப்பனேரி,  கடம்பன்குளம்,  ஏழாயிரம்பண்ணை கிராமங்களில் முகாம் நடக்கிறது. 
4ந்தேதி குலசேகர நல்லூர், வி.சுந்தரலிங்கபுரம், அயன்ரெட்டியபட்டி, பிள்ளையார்நத்தம், போத்தி ரெட்டிபட்டி, அரசியார்பட்டி, ரெகுநாதபுரம், ஓ.முத்துச்சாமிபுரம் கிராமங்களில் முகாம் நடக்கிறது. 

அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் துனை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News