உள்ளூர் செய்திகள்
புதுப்பித்தல்

வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு

Published On 2022-02-25 16:26 IST   |   Update On 2022-02-25 16:26:00 IST
2014 முதல் 2019 வரையிலான வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்காதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட  கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2014ம் ஆண்டு முதல் 2019வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத்தவறிய பதிவு தாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி  குறிப்பிட்ட பதிவுதாரர்கள் மார்ச் 1ந்தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் சம்மந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது  பதிவஞ்சல் வாயிலாக விண்ணப்பித்து  புதுப்பித்துக் கொள்ளலாம். 

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tnvelaivaaippu.gov.in/என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி மார்ச் 1ந்தேதிக்குள் பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News