உள்ளூர் செய்திகள்
மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டி கொன்ற 3 பேர் கைது
மத்திகிரி அருகே முன் விரோதத்தில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே பேள கொண்டப் பள்ளி பக்கமுள்ளது பெரியமேனா அக்ரஹாரம். இந்த ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). கூலித் தொரிலாளி.
இவர் ஓசூர் அருகே குமாரனப்பள்ளி ஏரிக்கரையில் நேற்று முன்தினம் கை, வயிறு, முகம் ஆகிய பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலையுண்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர் பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணப் பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணப்பாவை அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 31), ஜாக்கி என்கிற ஜெயகுமார் (25), லச்சு என்கிற லட்சுமி நாராயணன் (24) என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசார ணையில் மஞ்சுநாத்தின் உறவுக்கார பெண் ஒருவரை பற்றி கிருஷ்ணப்பா தவறாக பேசியதும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கிருஷ்ணப்பாவை மஞ்சுநாத் தரப்பினர் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது- அது தொடர்பாக மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.