உள்ளூர் செய்திகள்
டிரைவரை கத்தியால் குத்திய பைனான்சியர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் டிரைவரை கத்தியால் குத்திய பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38). டிரைவர். குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கணேஷ் (36). பைனான்சியர். ராமகிருஷ்ணன், ரூ.10 ஆயிரம் தொகையை கணேசிடம் வாங்கினார்.
அதில் ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரத்தை திரும்ப கொடுத்து விட்டார். மீதி தொகை ரூ.5 ஆயிரத்தை கணேஷ் ராமகிருஷ்ணனிடம் கேட்டார். அப்போது ராமகிருஷ்னன் தன்னிடம் இல்லை என கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த கணேஷ் கத்தியால் ராம கிருஷ்ணனை குத்தினார். இதில் காயம் அடைந்த ராம கிருஷ்ணன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.