உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாயமான கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள மாதஅக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாயனநாயக் (வயது21). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவனின் தந்தை ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.