உள்ளூர் செய்திகள்
.

பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

Published On 2022-02-25 15:18 IST   |   Update On 2022-02-25 15:18:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தொகரப்பள்ளி அடுத்துள்ள ஆடாளம் பகுதியை சேர்ந்தவர் சென்னகேசவன். இவரது மனைவி சரோஜா.

இந்த நிலையில் சென்னகேசவனுக்கும், தம்பி மனைவி மணியம்மாளுக்கு இடையே நிலத்தகராறு பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 18ந்தேதி அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதனால் சென்ன சேகவன் மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகியோர் சேர்ந்து மணியம்மாளை சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இது குறித்து மணியம்மாள் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பெண்ணை தாக்கியதாக சென்னகேசவனை கைது செய்தனர்.

Similar News