உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட சரவெடிகள் வைத்திருந்த 4 பேர் கைது
விருதுநகரில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் அந்த தொழிலை நம்பி உள்ள ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பிஜிலி (சீனி வெடி), சரவெடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவகாசி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிஜிலி, சரவெடிகளை வைத்திருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:
வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த குருசாமி (40) என்பவர் ஆயிரம்வாலா சரவெடிகள் கொண்ட 30 அட்டைபெட்டிகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கருப்பசாமி, கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த சின்னமாரியப்பன் ஆகியோர் தலா 8 கிலோ சரவெடிகளை வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.
கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த கொடியரசன் என்பவர் 240 பிஜிலி வெடி பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறி அவரை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.