உள்ளூர் செய்திகள்
விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியிடம் சில்மிஷம்- முதியவர் கைது
ஈரோட்டில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு காரபாறை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 63). இவர் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியிடம் நைசாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் வீட்டுக்குள் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குருநாதன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் குருநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.